விளைவுகள் அறியும் சாதகமானதல்ல எனவும் அறியும் மனதால் ஏற்க இயலாது மாயமாக அவை சாதகமாகுமோ?
அனைத்தும் அறிந்த மனமே நீ அறிந்ததை மறைக்க முயலாதே விதைத்தது வெளிவருவது உறுதி களை எடுக்கும் நேரமிது சிந்தி நீ
கைமீறி பொகும் முன் கடமை செய் வினையது விருட்சம் ஆகும் முன் அழிவு உனக்கு எட்டடி என்றால் உன் உறவுக்கு பதினாறடி, மறவாதே
உதாசீனம் ஒரு தாமதித்த தற்கொலை தாமதம் உன் எதிரியின் விருட்சக வளர்ச்சி அறியும் உன்னால் காப்பாற்ற முடியுமென அறிதல் அகல்வதற்குள் அடிஎடு
மனதில் நம்பிக்கை நமக்கு வாழவழிக்கும் நம்பிக்கை வேர்களுக்கு நீர் ஊற்று பருவகாலம் கைகோடுக்கும், வசந்த காலம் நம் அருகில் பூத்து குலுங்கும் நேரம் வரும் நீ கவலைநீக்கு!!
Comentarios